செவ்வாய், 16 செப்டம்பர், 2014அருவி இதழ் 21 , 22 ஏப்ரல் - செப்டம்பர் 2014 ல் வெளியான என் கவிதை .


எழுதப் படும் எல்லா வரிகளும்
ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதாகவே
இருக்கின்றன .

யாரால்... எப்போது ... எங்கே ...
எதுவும் தெரியவில்லை .

எனினும்
எழுதப்பட்டு விட்டன என்றே
உணரத் தோன்றுகிறது .

வாழ்க்கையும் அப்படியேதான்
எத்தனை விதமாக வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாராலோ
எப்போதோ
வாழப்பட்டு விட்டதாகத்தான்
தோன்றுகிறது .

அதனால்தான்
வாழ்க்கையும் கவிதையும்
அதனதன் போக்கில்
இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

[ நந்தலாலா இணைய இதழ் – 017   வைகாசி – 2014  இதழிலும் வெளியாகி உள்ளது ]

நன்றி : அருவி மற்றும் நந்தலாலா .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக