செவ்வாய், 16 செப்டம்பர், 2014" நிழல் பெறும் மரங்கள் . "

வழிப் போக்கன்
உரித்ததனால்
தோல் இழந்து ,
காக்கையின் எச்சத்தால்
அழகிழந்து ,
கல்லடி பட்டதினால்
கரு சிதைந்து ,
நெருப்புக்காக
அங்கங்கள் முறிக்கப் பட்டு ,
இயற்கையின் சதியால்
நீரின்றி வாடி ,
தகிக்கும் வெயிலால்
துவண்டு ,
கறையானுக்கு இரையாகி
உடல் குலைந்து ...
முடிவு தெரிந்தும்
கலங்காத மோனத் தவத்தில்
இடைவிடாது
தன் மெலிந்த கரங்களை நீட்டி
இயன்ற வரை
தருகின்ற நிழல்
பெற்று இளைப்பாறும்
மனித மரங்கள் .


[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக