ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

சலனம் .சலனம் .

நிழலுக்கு ஒதுங்கிய
மரத்தின் இலையில் -
பார்வையில் பதிந்த
ஜன்னலின் கம்பியில் -
காலுக்கடியில்
நெருடிய புல்லில் -
நிறம் தெளிக்கும்
ஒற்றை மலரில் -
எங்கெங்கு காணினும்
வான்கோவின் தூரிகை வீச்சாக
அந்த
பட்டாம்பூச்சி
-  அசைவின்றி .
படபடப்பு
மனதில் மட்டும் . 


[ புதுப்புனல் டிசம்பர் 2013 ]கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக