புதன், 1 அக்டோபர், 2014

ஒவ்வாமை .

ஒவ்வாமை

நீலப் பரப்பின்
நடு நடுவே
வெண் பாறைகள்
மூழ்கி மூழ்கி
இரை தேடும்
பெயர் தெரியாத
கரும் பறவை
மீனுக்காய்
காத்திருக்கும்
நீள் கால் வெண்கொக்கு
நீரோட்டத்தில்
தத்தளிக்கும்
ஒற்றை இலை
எல்லாமே அழகுதான்
எனினும்
அந்த நதிக்கரையில்

எனக்கென்ன வேலை ?

[ புதுப்புனல் ஜனவரி 2014 ]

1 கருத்து: