திங்கள், 20 அக்டோபர், 2014

நீயும் நானும்

நீயும் நானும்

நீயும்
நானும்
வேறு வேறுதான் .
உடலால் ,
உண்ணும் உணவால் ,
உடுக்கும் உடையால் ,
வசிக்கும் ஊரால் ,
வாழ்கின்ற வாழ்க்கையால் .
எனினும்
உள்ளத்தால் ,
உருவாகும் எண்ணத்தால் ,
பட்ட காயங்களால் ,
படுகின்ற அனுபவங்களால்
நீயும்
நானும்
ஒன்றே
தெரியுமோ ?

[ புதுப்புனல் பிப்ரவரி 2014 ]கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக