வெள்ளி, 3 அக்டோபர், 2014

நிறைய ... நிறைய ...


தத்தளிக்கும் இலையாக ,
அமைதியூட்டும் கவிதையாக ,
சுட்டெரிக்கும் தீயாக ,
கலைந்து விரியும் மேகமாக ,
காகிதக் கப்பலாக ,
நிமிர்ந்த மலை முகடாக ,
வளையும் நாணலாக ,
சிலிர்த்தோடும் நதியாக ,
தேங்கிய குட்டையாக ,
இன்னும் பலவாக
நிறைய உவமைகளை
உருவாக்கிய பின்னும்
வாழ்க்கை
என்னவென்று புரியவே இல்லை
இன்னும் .      

[ புதுப்புனல் டிசம்பர் 2013 ]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக