ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தெளிவு .

தெளிவு .

நேற்று என்னவோ
அதுவே இன்றும்
இன்று எதுவோ
நாளையும் அதுவே
தெளிவு
என்பது தேடி வருவதல்ல .
உதிர்ந்ததும் இலைதான்
உதிரப்போவதும் இலைதான் .
பச்சையும்
பழுப்பும்
கால இடைவெளியே
விதைகள்
மண்ணில் புதைந்து
மரமாகுமென்பதால்
கனிகள்
புசிக்கப்படாமலா போகின்றன ?    

[ புதுப்புனல் நவம்பர் 2013 ]       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக