திங்கள், 6 அக்டோபர், 2014

வீழ்ந்த நட்சத்திரம் .


வீழ்ந்த நட்சத்திரம் .

இரவுகள் விழித்துக் கொண்ட
ஒரு பகல் நேரத்தில்
நெடிய மரங்களின் கூரிய நகங்கள்
தரையைக் கிளறி
கண்டெடுத்த புதையலில்
தொலைந்து போன கனவுகள்
சிதறிக் கிடந்தன .

பகல் இரவைத் தன்னோடு
இணைத்துக் கொண்டு
ஆடிய நடனத்தால்
நட்சத்திரங்கள் எரிந்து
கீழே விழத் தொடங்கின .

பாதி வழியில் சப்தங்கள்
கரைந்து போனதினால்
வெளிச்சம் காணாமல் போக
எஞ்சியிருந்த கனவுகளும்

கலைந்து போயின .

[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக