சனி, 4 அக்டோபர், 2014

தொலைந்து போனது .





தொலைந்து போனது .

இரண்டாயிரம் சதுர அடி
தரைத் தளமும் மாடியுமாய் .
நான்கு புறமும் எட்டு செண்ட் வெற்றிடம் .
போர்ட்டிகோவில் நடுத்தரக் கார் .
மூத்தவன் மருத்துவன் .
இளையவன் கணிணி மேதை .
இருவரும் இருப்பதோ
இந்திய எல்லைக்கப்பால் .

வீடு துடைக்க , பாத்திரம் கழுவ
தனித் தனியாக வேலையாட்கள் .
துணி துவைக்கவும் , சமையல் செய்யவும்
விதம் விதமான இயந்திரங்கள் .
தோட்டத்தை சுத்தமாக்க
வந்து போகும் தோட்டக்காரர் .

காவலுக்கு விலையுயர்ந்த
கோபக்கார நாய் .
இத்தனைக்கும் நடுவில்
தொலைந்து போய் விட்டது
பாதுகாத்து வைத்திருந்த ,
“ காணி நிலம் “ கேட்ட பாரதியின்
கவிதைத் தொகுப்பு .

[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக