சனி, 1 நவம்பர், 2014

தொடர்பு எல்லைக்கப்பால் ...

தொடர்பு எல்லைக்கப்பால் ...

உறவுகள்
நிறைய உண்டு .
நட்புகளுக்கும்
குறைவில்லை .

தொழில் ரீதியில்
தொடர்புகள் ஏராளம் .

பயணங்களாலும்
பழக்கம் பல உண்டு .

இணையம் வழியே இணைந்த
சிநேகம் அநேகம் இப்போது .

மனதால்
உணர்வால்
இன்னும் பலவால்
ஏராளம் ...ஏராளம்...
எனினும்
அலைவரிசைக் கோளாறால் ,
எல்லாமும் ,
அநேகமாக எப்போதும்
தொடர்பு எல்லைக்கப்பால்தான் .


[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக