திங்கள், 24 நவம்பர், 2014

நேற்று பார்த்த நதி .


நேற்று பார்த்த நதி .


நேற்று பார்த்த நதி
இன்று இங்கில்லை
தூரத்தை
முன்னே தள்ளி
காலத்தை
பின்னே நிறுத்தி
ஏற்படும்
இடமாற்றத்தில்
எதிர் படலாம்
அதே நதி
இன்னொரு இடத்தில் .
ஆனால்
நதியென்பது
நீர் மட்டுமன்றி
நீர் சார்ந்திருக்கும்
நிலமும்
நீர் தொடும் கரைகளும்
கரை வாழ் மனங்களும்
என்பதினால்
நேற்று பார்த்த நதியை
மீண்டும் காண்பது
சாத்தியமே இல்லைதான் .

[ புதுப்புனல் நவம்பர் 2014 ]


5 கருத்துகள்:

 1. //நேற்று பார்த்த நதியை
  மீண்டும் காண்பது
  சாத்தியமே இல்லைதான் .//
  பலப் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வரிகள்.

  பதிலளிநீக்கு
 2. கேவலமான மனித மணங்கள்
  நதிக்கு பூட்டு போடும்
  அவலத்தை அரங்கேற்றுகின்றன

  பதிலளிநீக்கு
 3. கேவலமான மனித மணங்கள்
  நதிக்கு பூட்டு போடும் அவலத்தை
  அரங்கேற்றுகின்றன .

  பதிலளிநீக்கு
 4. நேற்றைய பார்வை
  இன்று இல்லை
  நாளைய காத்திருப்பு வேறு
  கவலைகளை ஒழிக்க
  நீ தேடு...நேற்று, இன்றும், நாளையும்
  உன் கையில்...

  பதிலளிநீக்கு