ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நதியில் மிதக்க விட்ட கவிதை .


 நதியில் மிதக்க விட்ட கவிதை .

நதி நிலவைச் சுமந்த
ஒரு முன்னிரவு நேரத்தில்
பேருந்து பாலத்தில் ஓடியது .
ஜன்னலோர இருக்கையிலிருந்த
எனது பார்வையில்
நதியும்
அதில் மிதக்கும் நிலவும்
பட்டபோது
சட்டென்று தோன்றியதால்
மனதிலிருந்த எனது கவிதையில்
ஒன்றை வீசியெறிந்தேன்
ஜன்னல் வழியே வெளியே .

மிதக்க விட்ட கவிதையை
மறந்து விட்ட
ஒரு முன்மாலை நேரத்தில்
இலேசாய் வெளிச்சம் போர்த்திய
நதியின் கரையில்
நின்றிருந்த போது
தூரத்தில்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் கவிதை
நிலவின் கைகளைக் கோர்த்தபடி
மேலும் அழகு கூடி .

 [ புதுப்புனல் டிசம்பர் 2014 ] 

 [ மலைகள் இணைய இதழ்  - 63 ஆவது இதழ் – டிசம்பர் 2 , 2014 ]கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக