ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நிறைய்ய்ய்ய


நிறைய்ய்ய்ய
நிறைய்ய்ய்ய
பொய்களும்
அவ்வப்போது
உண்மைகளுமாய்
கிட்டத் தட்ட
வாழ்ந்து முடித்தாயிற்று
வாழ்க்கையை .
முதுகு தளர்த்தி
கால் நீட்டி
கவிதைகளை வாசிக்கையில்
தோன்றுகிறது
வாழ்க்கையை விட
கவிதையில்
பொய்கள் கம்மிதானென்று .


[ புதுப்புனல் டிசம்பர் 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக