வியாழன், 15 அக்டோபர், 2015

காணாமல் போகலாம் .


காணாமல் போகலாம் .

நேற்றைய கவிதையை
தேடியலைகையில்
எதிர்ப்பட்டது
இன்றைய கவிதை .
அகப்பட்ட கவிதையை
கட்டுடைத்துப் பார்க்கையில்
எஞ்சியது
கொஞ்சம் வார்த்தைகளே
என்றுணர்ந்த கணத்தில்தான்
தோன்றியது
காணாமல் போகலாம்

நாளையக் கவிதையுமென்று . 

 [ புதுப்புனல் ஜீன் 2015 ]

3 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா! அருமையான கவிதை! பதிவர் சந்திப்பில் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா!!

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை
    இந்த அதிருப்தியே
    அடுத்த கவிதைக்கான விதை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு